நியூசிலாந்து நாட்டு ஆடுகளங்களின் தன்மை மாறிவிட்டது – சச்சின் கருத்து
இந்திய கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
ஆனால் டி20 கிரிக்கெட் போட்டி வந்த பிறகு பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மைகள் மாறிவிட்டன என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘நியூசிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் 1990-களில் வேகப்பந்து வீச்சு சாதகமான வகையில் இருந்தன. 2009-களில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் மாற்றப்பட்டன.
நாங்கள் 2009-ல் விளையாடும்போது ஹாமில்டன் ஆடுகளம் மற்ற ஆடுகளத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. வெலிங்கடன், நேப்பியர் ஆடுகளங்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஹாமில்டன் அப்படி இல்லை’’ என்றார்.