நியூசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு குழந்தை பிறந்தது

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் மனைவி சாரா ரஹீமுக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதை வில்லியம்சன் இன்ஸ்டாகிராம் மூலம் நேற்று தெரிவித்தார்.

குழந்தையை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் அவர் ‘எங்களது குடும்பத்திற்கு அழகான பெண் குழந்தையை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மனைவியை அருகில் இருந்து கவனிப்பதற்காக வெலிங்டனில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து வில்லியம்சன் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையாகி இருக்கும் கேன் வில்லியம்சனுக்கு பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆக்லாந்தில் நாளை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் வில்லியம்சன் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. கடைசி இரண்டு 20 ஓவர் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் 2 டெஸ்ட் போட்டியிலும் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools