நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்காக 2ம் தர அணியை அனுப்பும் தென் ஆப்பிரிக்கா – ஐசிசிக்கு ஸ்டீவ் வாக் கண்டனம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. அந்த சமயத்தில் உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க 20 ஓவர் லீக் போட்டி நடப்பதால் அதற்கான ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் இருப்பதால், தேசிய அணியை தவிர்த்துள்ளனர். இதனால் இதுவரை சர்வதேச போட்டியில் ஆடாத நீல் பிராண்ட் என்ற வீரர் தலைமையில் 2-ம் தர அணி நியூசிலாந்துக்கு அனுப்பப்படுகிறது.

இதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கவலை இல்லை. நான் நியூசிலாந்தில் இருந்திருந்தால் இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாடமாடடேன். முன்னணி வீரர்கள் இன்றி விளையாடும் போட்டி எதற்கு என்று தெரியவில்லை.

நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அவர்கள் உரிய மரியாதை கொடுக்காத போது, எதற்காக விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்கிறதா என்று கேட்க வைக்கிறது. ஐ.சி.சி மற்றும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதில் ஐ.சி.சி.யோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ விரைவில் தலையிடாவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டாகவே இருக்காது. ஏனெனில் நீங்கள் உங்களது திறமையை மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக சோதிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும். பெரிய கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports