Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் – சாஹின் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் முடிவடைந்த நிலையில் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக சாஹின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீபுல்லா, அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் டி20 தொடருக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் பாகிஸ்தான் அணி விவரம்:-

ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.