பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 5-0 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்தது. பிரேஸ்வெல் 43 ரன்னிலும், டாம் லதாம் 42 ரன்னிலும், பிலிப்ஸ் 37 ரன்னிலும், டேரில் மிட்செல் 36 ரன்னிலும் அவுட் ஆகினர். பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 5 விக்கெட்டும், உசாமா மிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் 56 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 66 ரன்னும் எடுத்தனர். முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார். இறுதியில், பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 5 விக்கெட் வீழ்த்திய நசீம் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.