X

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன் தினம் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 146 ரன் இலக்காக இருந்தது.

பிலிப்ஸ் அதிகபட்சமாக 26 பந்தில் 41 ரன்னும் ( 4 பவுண்டரி , 2 சிக்சர் ), கேப்டன் வில்லியம்சன் 24 ரன்னும் ( 2 பவுண்டரி ) எடுத்தனர். ஓடியன் சுமித் 3 விக்கெட்டும் , அகீல் ஹூசைன் 2 விக்கெட்டும் , டொமினிக் டிரேக்ஸ், ஹைடன் வால்ஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

புரூக்ஸ் 56 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), பிரண்டன் கிங் 35 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி , 3 சிக்சர்) போவெல் 15 பந்தில் 27 (2 பவுண்டரி , 2 சிக்சர் எடுத்தனர். சவுத்தி, சோதிக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது. முதல் 2 போட்டியிலும் தோற்று தொடரை இழந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது ஆறுதல் வெற்றியாகும். 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந்தேதி பிரிட்ஜ் டவுனில் நடக்கிறது.