நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 176 ரன்னிலும், ஒல்லி போப் 145 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் லீஸ் அரை சதமடித்து 67 ரன்னிலும், விக்கெட் கீப்பர் போக்ஸ் 56 ரன்னிலும் அவுட்டாகினர்.

நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வில் யங், டேவன் கான்வே, மிட்செல் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். யங் 56 ரன்னும், கான்வே 52 ரன்னும் எடுத்தனர். மிட்செல் இறுதிவரை போராடி 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் பிராட் 3 விக்கெட், ஆண்டர்சன், மேட்டி பாட்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools