Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் காலின் டி கிராண்ட்ஹோம் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பாட்ஸ் தலா 4 விக்கெட்டும், பிராட், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 141 ரன்னில் ஆல் அவுட்டானது. ஜாக் கிராவ்லி 43 ரன்களும், அலெக்ஸ் லீஸ் 25 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் டிம் சவுதி 4 விக்கெட், டிரண்ட் போல்ட் 3 விக்கெட், கைல் ஜாமிசன் 2 விக்கெட், காலின் டி கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

9 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட் இழந்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. மிட்செல் 97 ரன்னுடனும், பிளெண்டல் 90 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தை விட 229 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து.