நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியசிலாந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின்போது இந்திய அணி ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் நான்கு ஓவர்களை வீசி முடிக்கவில்லை. ஐசிசி விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்காத ஒவ்வொரு ஓவருக்கும் அந்த அணியின் வீரர்களுக்கு போட்டிக்கான சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதனடிப்படையில் இந்திய அணி வீரர்களுக்கு தலா 80 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக கடைசி இரண்டு டி20 போட்டிகளிலும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.