Tamilவிளையாட்டு

நியூசிலாந்தின் தலைசிறந்த வீரர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கிடைத்திருக்கிறது – டிம் சவுத்தி

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் இன்று ‘பாக்சிங் டே’ டெஸ்டாக மெல்போர்னில் தொடங்குகிறது. நியூசிலாந்து அண்டை நாடாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் விளையாடி நீண்ட காலம் ஆகிறது.

இரு அணிகளுக்கும் இடையில் 1987-ம் ஆண்டு மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெற்றது. அதன்பின் தற்போதுதான் நடக்க இருக்கிறது. தற்போதைய நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர், வாட்லிங், கிராண்ட்ஹோம், நீல் வாக்னர் ஆகியோர்தான் 1987-க்கு முன்னர் பிறந்தவர்கள். மற்ற வீர்ரகள் பிறந்திருக்கமாட்டார்கள்.

இந்நிலையில், நியூசிலாந்தின் தலைசிறந்த வீரர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது என்று டிம் சவுத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

டிம் சவுத்தி இதுகுறித்து கூறுகையில் ‘‘நியூசிலாந்தில் இருந்து ஏராளமான தலைசிறந்த வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆகவே, இது எங்களுக்கு சிறப்பு வாய்ந்தது.

ஒவ்வொருவரும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை பார்த்து வளர்ந்திருப்பார்கள் என்பதை உறுதியாக கூற இயலும். ரசிகர்கள் கூட்டம், வரலாறு ஆகியவை இதற்கு பின்னால் உள்ளது. 30 வருடத்திற்கு மேலாக பாக்சிங் டே டெஸ்டில் நியூசிலாந்து விளையாடியது கிடையாது. இது கொஞ்சம் வித்தியாசமான ஸ்பெஷல்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *