நின்றுக்கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து – 4 பேர் பலி
செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பழுதாகி நின்ற லாரி மீது மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் மீது முசிறியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.