Tamilசெய்திகள்

நித்யானந்தா வெளிநாட்டுக்கு சென்றதற்கான தகவல்கள் இல்லை – மத்திய அமைச்சகம் அறிவிப்பு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது.

இதனையடுத்து போலீசார் குழந்தைகளை மீட்டனர். நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல், சித்ரவதை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குஜராத் போலீசார் மேற்கொள்வார்கள் என்றும், இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்று ஆமதாபாத் எஸ்.பி. ஆர்.வி.ஆசாரி தெரிவித்தார்.

இதற்கிடையில் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், குழந்தைகளை கடத்தி வைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் எனது அனைத்து குரு குலத்திலும் அனைத்து பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளிடம் எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதி உள்ளது. இதனால் எனது அனைத்து குருகுலமும் எப்போதும் திறந்தே இருக்கும். நிறைய பெற்றோர்கள் எனது ஆசிரமத்திலேயே தங்கி உள்ளனர். நான் தற்போது இமயமலையில் இருக்கிறேன் என்றார்.

இந்நிலையில், நித்யானந்தா இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றதற்கான காவல்துறை அல்லது உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்று வெளியுறவுத் துறை செயலர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *