Tamilசெய்திகள்

நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது – மத்திய அமைச்சர் பேச்சு

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

ஊரக மற்றும் குக்கிராம பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு சென்று சேரவேண்டும்.

பிரதமர் மோடியின் இந்த எண்ணத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் மனதில் கொள்ளவேண்டும். எந்த ஒரு அரசு திட்டங்களுக்காகவும், நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியுடன் இருக்கிறது. கடந்த எட்டு வருடங்களில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல், தேவையான பயனாளிகளுக்கு சென்றடைந்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.