திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் திரைப்படங்களின் வெளியாகும் எண்ணிக்கை குறைந்ததுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. பின் மார்ச் 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எப்போதும் லாஸ் ஏஞ்சல்சின் யூனியன் ஸ்டேஷன்சில் நடக்கும் விழா, இந்த முறை ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரிலேயே நடத்த திட்டமிட்டு இருப்பதாக அகாடமி தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு கொரோனா சான்றிதழ் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் இறுதிப் பட்டியலில் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.