அஜித் நடிப்பில் வெளியான வாலி படம் மூலம் அறிமுகமான ஜோதிகா அதன்பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோயின் ஆனார். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்காமல் இருந்தவர், கடந்த 2015 முதல் மீண்டும் நடித்து வருகிறார்.
தற்போது பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலை கட்டி பங்கேற்ற ஜோதிகா, மேடையிலேயே சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஜோதிகா சிலம்பம் சுற்றும்போதும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.
இந்த வீடியோவை சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜோதிகாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.