X

நாளை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை முதல் 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது