Tamilசெய்திகள்

நாளை பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் (31-ந்தேதி) தொடங்குகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார். அதன்பிறகு வருகிற பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 9-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம் அதை சுமூகமாக நடத்த மத்திய அரசு, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல இந்த முறையும் நாளை (30-ந்தேதி) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.