X

நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் செயல்படும்

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

வரும் ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.

பொது வினியோக திட்டத்தின் கீழ் ஜனவரி 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக பிப்ரவரி 26-ம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.