நாயை நல்ல நடிகை என்று பாராட்டிய வரலட்சுமி!
கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது பயணத்தை மாற்றி வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.
அடுத்ததாக காமெடியிலும் களமிறங்கத் தொடங்கி உள்ளார். அறிமுக இயக்குனர் சந்தானமூர்த்தி இயக்கும் புதிய படம் டேனி. முத்தையா, தீபா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜனவரி 7-ம் தேதி இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வில்லத்தனமான கேரக்டரில் நடித்துவந்த வரலட்சுமி முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் காமெடிக்கு மாறியுள்ளார். இதன் திரைக்கதையில் நாய் ஒன்று முக்கிய இடம் வகிக்கிறது.
வரலட்சுமி கதாபாத்திரத்துடன் இணைந்து பயணிக்கும் விதமாக அந்த நாய் இடம் பெறுகிறது. அந்த நாயின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள வரலட்சுமி, “பெரிய நட்சத்திரம் இவள். டேனி படத்தில் தனது காட்சிக்காக காத்திருக்கிறாள்.
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான். இவளோடு இணைந்து பணியாற்றுவது விருப்பமானதாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆன்ந்த்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பாசில் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.