X

நான் வெறும் முதலுதவி பெட்டி தான் – உலக கோப்பைக்கு தேர்வான தினேஷ் கார்த்தி கருத்து

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரிஷப் பந்த், அம்பதி ராயுடு ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைத்தது. தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தாலும், அணியில் தோனி இருக்க தான் ஒரு முதலுதவி பெட்டி போலத்தான் இருப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பது எப்போதுமே மகிழ்ச்சியான தருணம். நான் அதிர்ஷ்டசாலி. தேர்வு செய்ததற்கு நன்றி. நான் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்தே, உலகக்கோப்பைக்கான என்னுடைய பயணம் தொடங்கியது. நான் ஏதாவது சிறப்பாக செய்தால் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்க முடியும் என்று நம்பினேன்.

அணி நிர்வாகம் என்னிடம் எதனை எதிர்பார்க்கிறதோ அதனை நிறைவேற்ற முயற்சி செய்வேன். தோனி அணியில் இருக்க, தான் ஒரு முதலுதவி சிகிச்சை பெட்டி போல்தான் அணியுடன் பயணம் செய்வேன். டோனி காயம் அடைந்தால், அன்றைய தினம் நான் காயத்திற்கான கட்டாக (Band-Aid) இருப்பேன். ஆனால் என்னால் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய முடியும். அல்லது பினிஷராக செயல்பட முடியும். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் செய்வேன். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் முழு பேட்ஸ்மேனாக செயல்பட கடுமையாக வகையில் தயாராகுவேன்’’ என்றார்.

Tags: sports news