X

நான் விஜயை தூரத்தில் இருந்து ரசிக்கும் ரசிகன்! – நடிகர் கதிர்

விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அட்லி இயக்கும் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் ’ஒரு நடிகராக, விஜய் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட பழகிய பிறகு, அவருடைய கேரக்டரும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. சிறந்த மனிதர். நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கிறவர். அவரை எப்போதும் தூரத்திலிருந்து ரசிக்கும் ரசிகன் நான்.

இதுவரை இப்படி இருந்த சூழலில், அவர்கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அது, எனக்குப் பெரிய சந்தோ‌ஷத்தைக் கொடுத்திருக்கு. இந்த வாய்ப்பை வாழ்க்கையில மறக்கவே முடியாது. இயக்குநர் அட்லி அண்ணா எனக்கு நல்ல நண்பர். என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி. என் சினிமா வளர்ச்சியைப் பற்றி அடிக்கடி பேசும் நபர்.

நல்ல படங்களில் நான் நடிக்கும்போது, கூப்பிட்டு பாராட்டுவார். விஜய் சார் படத்துல உனக்கும் ஒரு ரோல் இருக்கு’னு சொன்னபோது, அந்த அதிர்ச்சியில இருந்து நான் மீண்டு வருவதற்குள் மொத்தக் கதையையும், படத்துல என்னுடைய கேரக்டர் பற்றியும் பேசினார். எனக்கு ரொம்ப சந்தோ‌ஷமாகி விட்டது. ஏதோ வந்துட்டுப் போற மாதிரியான கேரக்டரை அவர் எனக்குக் கொடுக்கவில்லை, படத்துல முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கார். கதையைச் சொன்னதுமே, ஓகே சொல்லிட்டேன்.