X

நான் ரஜினியை வைத்து இயக்கும் படம் விசில் பறக்கும் – ராஜமவுலி

தெலுங்கு திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு அமைந்திருக்கும். ராஜமவுலி தெலுங்கு நடிகர்களை வைத்து மட்டுமே படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து படம் இயக்கும் அவர், அதற்கு அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்தி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமவுலியிடம் நீங்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் உங்கள் தேர்வு ரஜினியா இல்லை கமலா? என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ராஜமவுலி நான் ரஜினியை வைத்துதான் படம் இயக்குவேன். நான் அவருடன் இணையும் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் விசில் பறக்கும்’ என்று பதில் அளித்துள்ளார்.