நான் யாருடனும் மோத இங்கு வரவில்லை! – அஜித்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்திருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

அஜித்துடன் பணியாற்றியது பற்றி இயக்குனர் சிவா கூறும்போது, ”அஜித் சிறந்த மனிதர். அவரைப் பற்றி சொன்னால், சொல்லிக்கொண்டே செல்லலாம். படத்தையும் தாண்டி பல நல்ல விஷயங்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்வார். ரசிகர்கள் எப்படி அஜித் மீது பாசமாகவும், விஸ்வாசமாகவும் இருக்கிறார்களோ, அதுபோல் அஜித்தும் அவர்கள் மீது விஸ்வாசமாக இருக்கிறார். அடிக்கடி ரசிகர்களைப் பற்றி பேசுவார்.

அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. நான் இங்கு வேலை பார்க்க தான் வந்திருக்கிறேன். யாருடனும் மோத வரவில்லை என்று அஜித் என்னிடம் அடிக்கடி கூறுவார். முழுமனதுடன் சொல்லுகிறேன் அவரைப் போல நல்ல மனிதரை பார்த்ததில்லை. நேர்மையானவர்.” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools