X

நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க தேவையில்லை – விராட் கோலி

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோத விராட் கோலி நான்கு சதங்களுடன் 692 ரன்கள் குவித்திருந்தார். சராசரி 86.50 ஆகும்.

அதன்பின் ரன்மெஷினாக மாறினார். இந்த தொடரிலும் அதிக அளவில் ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் “நீங்கள் விளையாடும்போது ஒவ்வொரு தொடரில் இருந்தும், ஒவ்வொரு போட்டியில் இருந்தும், ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது கற்றுக் கொள்கிறீர்கள். நான் கடந்த முறை இங்கு வந்த பிறகு, தற்போது அதிகப்படியான நம்பிக்கையில் உள்ளேன. நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருப்பதா உண்மையிலேயே நினைத்தது இல்லை.

அணி என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை செய்வதுதான் முக்கியமானது. என்னால் முடிந்த அளவிற்கு 100 சதவீதம் பங்களிப்பை அளிக்க வேண்டும். இதுதான் அதிகப்படியான செயல்முறை. தற்போது வெளிநாட்டிற்குச் செல்லும்போது அதிக அளவிலான மாறுபட்ட நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தது கிடையாது. இதைத்தான் கடைபிடித்து வருகிறேன்.

என்னுடைய கிரிக்கெட் கால தொடக்கத்தில், முக்கியமான மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற நினைப்புள் இருந்தன. ஆனால் தற்போது முழுக்கவனமும் எந்த விலைக்கொடுத்தாவது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான்” என்றார்.