காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா வைரஸ் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். நோய் மட்டுமல்ல பொருளாதார சீரழிவு ஏற்படும் என்று எச்சரித்துக் கொண்டே இருந்தார்.
ஆனால் மத்திய அரசு அவரது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏழைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேணடும் என்பது காங்கிரஸ் கட்சியின் முதன்மை கோரிக்கையாக இருந்தது. அதையும் மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் பொதுமுடக்கம் காலத்தில் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் பொருளாதாரத்தை மீடடெடுக்க நீண்ட காலம் ஆகும். ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பல மாதங்களுக்கு முன் நான் எச்சரித்தது என்னவோ? அதை இன்று ஆர்பிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
அதிகமாக செலவு செய்யுங்கள், கடன் கொடுக்காதீர்கள். ஏழைகளுக்கு பணம் கொடுங்கள். தொழிலதிபர்களுக்கு வரி குறைப்பு செய்யாதீர்கள். நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யுங்கள்.
மீடியா மூலம் திசைதிருப்புவதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவ முடியாது அல்லது பொருளாதார சீரழிவை மறைத்துவிட முடியாது’’ எனப் பதிவிட்டுள்ளார்.