நான் முதல்வரானால் 10 கிலோ அரிசி இலவசம் – சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தனது தொகுதியான பாதாமியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

ஏழை மக்கள் யாரும் உணவு இன்றி பசியால் வாடக்கூடாது. வயிறு நிறைய சாப்பிட வேண்டும். வெள்ளம், வறட்சி எது வந்தாலும் மக்கள் வயிறு நிறைய சாப்பிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும். நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன்.

நான் ஆட்சியில் இருந்த வரைக்கும் கஜானா நிரம்பியே இருந்தது. எடியூரப்பா ஆட்சிக்கு வந்த பிறகு கஜானாவில் பணம் இல்லை. சமுதாய பவன் கட்ட நிதி ஒதுக்குமாறு மந்திரி ஸ்ரீராமுலுவிடம் கேட்டேன். கஜானாவில் பணம் இல்லை என்று எடியூரப்பா கூறிவிட்டதாக சொல்கிறார். நான் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறேன்.

தற்போது பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் சில மந்திரிகள் எனது பேச்சை கேட்கிறார்கள். அவர்களிடம் சொல்லி உங்களின் பணிகளை செய்து கொடுக்க முடியும். இந்த தொகுதிக்கு 7,000 வீடுகளை ஒதுக்குமாறு வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணாவிடம் கேட்டேன். நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறிவிட்டார்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools