நான் செய்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை – நடிகை மீனா வருத்தம்

1990களில் கலக்கிய மீனா திருமணத்துக்கு பின்னர் தமிழில் அதிகம் நடிக்காமல் இருந்தார். விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் கரோலின் காமாட்சி என்ற இணைய தொடரில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து கூறிய மீனா, “சினிமாவில் பிசியாக இருக்கும்போது டிவி பக்கம் செல்லவேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் துணிந்து நடித்தேன். இப்போது இணைய தொடர்கள் பிரபலமானதும் அதற்குள்ளும் வந்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். இதுவரை பார்க்காத மீனாவாக இருக்கவேண்டும் என்று விவேக் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை எடுத்து பார்த்துக்கொண்டார். கிளைமாக்சில் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. பொதுவாக ஹீரோக்கள் தான் என்னை படங்களில் காப்பாற்றுவார்கள். இதில் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலை. எனவே சண்டையிடுகிறேன்.

நான் முடியை குறைத்து பாப் கட் செய்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை. நண்பர்களுக்கும் ஆச்சர்யம். இதை பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொண்டார்கள். எனக்கு சினிமாவுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools