X

நான் சிறப்பாக பந்து வீச ஷேன் பாண்ட் முக்கிய காரணம் – பும்ரா புகழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருபவர் பும்ரா. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பவுலராக உள்ளார். கடைசி நேரத்தில் குறைந்த ரன்களின் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், இரு அணி கேப்டன்களும் அழைப்பது பும்ராவைத்தான்.

அப்படிபட்ட பும்ரா, தனது பந்து வீச்சை சரி செய்வதற்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் முக்கிய பங்கு வகித்தார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘நான் ஷேன் பாண்ட்-ஐ முதன் முறையாக 2015-ம் ஆண்டு பார்த்தேன். நான் சிறுவனாக இருக்கும்போது, பாண்ட் பந்து வீச்சை பார்த்துள்ளேன். அவருக்கு நியூசிலாந்து அணிக்காக எப்படி பந்து வீசுகிறார், பந்தை எப்படி வீசுகிறார் என்பது என்னை மிகவும் கவர்ந்தது.

அவரை இங்கு பார்க்கும்போது சிறந்த அனுபவமாக இருந்தது. பல்வேறு விசயங்களில் எனக்கு வெளிப்படையாக உதவியுள்ளார். வருடத்திற்கு வருடம் அவருடனான நட்புணவர்வு சிறப்பாக இருந்து கொண்டே இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இல்லாமல், இந்திய அணியில் இருக்கும்போது கூட அவருடன் பேச முயற்சிப்பேன். சிறந்த பயணம் தொடர்ந்து தொடரும் என நம்புகிறேன். என்னுடைய பந்து வீச்சில் புதிய விசயங்கள் குறித்து கற்றுக் கொள்ள முயற்சி செய்வேன். என்னுடைய பந்து வீச்சில் மிகப்பெரிய பங்கு வகிப்பார்.’’ என்றார்.