X

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் சுங்கச்சாவடிகள் இல்லாமல் போய்விடும் – சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சியின் சீமான், இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ஜி.எஸ்.டி வரி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வராதது பற்றி அவரிடம் கேள்வியெழுப்பிய போது,

எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் அதை மத்திய அரசு முதலிலேயே செய்திருக்க வேண்டும். எரிபொருட்களை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்தால் அது பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்காது. அதனால் அதைக் கொண்டு வர மாட்டார்கள். எரிபொருள் விலை என்பதை தட்டையாக பார்க்க முடியாது. அதுதான் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல சுங்கச்சாவடி கட்டணமும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் தாக்கம் செலுத்துகிறது. இதனால்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

சுங்கக் கட்டணம் வசூலித்தால், சாலைக்கென்று எதற்குத் தனி வரி வசூலிக்கிறார்கள். சாலைகள் போடப்பட்டால் அதற்கான செலவுக்கென ஒரு அறிக்கைத் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதைப் போலவே எத்தனை ஆண்டு காலம் சுங்கம் வசூலிக்கப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதையும் கூட ஏன், தனியார் முதலாளிகள் ஏலம் எடுத்து வசூலிக்கிறார்கள்?

நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே இரவில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் புல்டோசர் வைத்து தகர்த்து விடுவேன். என் மாநில சாலைகளை நான் பராமரித்துக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இங்கு ஆள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.