நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்கா வரவேற்பு!
சர்வதேச ஐசிசி தொடர்களுக்கு நெருக்கடி இல்லாமல் நாட்கள் எளிதாக கிடைப்பதற்கும், வருமானத்திற்காக அதிக அளவில் சர்வதேச தொடர்களை நடத்துவதற்காகவும் ஐசிசி ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலனை செய்து வருகிறது. அடுத்த ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்தது.
ஐசிசி-யின் இந்த முடிவுக்கு கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் மூன்று போர்டுகளில் ஒன்றான இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு உடனடியாக ஆதரவு தெரிவித்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐசிசி-யின் பரிசீலனையை முழுவதுமாக பார்த்த பின்னர் பதில் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சச்சின், விராட் கோலி உள்ளிட்ட முன்னணி ஜாம்பவான்கள் நான்கு நாள் டெஸ்ட் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் தென்ஆப்பிரிக்கா ஐசிசி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த செய்து பொய்யானது. நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா ஏற்கனவே ஜிம்பாப்வே அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பரிட்சார்த்த முறையில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.