X

நாதன் லயன் டி20 போட்டிக்கு தகுதியானவர் – ரிக்கி பாண்டிங் கருத்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் நாதன் லயன். முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக அளவில் விளையாடியது கிடையாது. 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 29 ஒருநாள் போட்டியிலும், 2 டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற ஆஷஸ் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்நிலையில் டி20 போட்டியிலும் விளையாட தகுதியானவர் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாதன் லயன் சிறந்த பந்து வீச்சாளராக வளர்ந்து வருகிறார். அவரை டி20 போட்டிக்கான அணியில் தேர்வு செய்ய அவர் பெயர் பரிசீலனை செய்யப்படலாம். ஏனென்றால் அவர் தற்போது சிறப்பாக பந்து வீசி வருகிறார். தற்போது அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் வகையை பார்க்கும்போது எல்லா வகை கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியானவர்’’ என்றார்.

Tags: sports news