நாசி வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கேட்கும் பாரத் பயோடெக் நிறுவனம்

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி 154 என்ற நாசி வழியாக செலுத்தும் மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையும், அதனுடைய நிறுவனமான உயிர்தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது.

இந்த மருந்தை 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், எளிதாக சேமித்து வைத்துக்கொள்ளலாம், பல பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்து கொரோனா தடுப்பூசியைப் போலவே மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நாசி வழியாக செலுத்தும் பிபிவி 154 என்ற மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக இந்த நாசி வழி செலுத்திக் கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம். இதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றியை தந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மக்கள் பயன்பாட்டுக்காக அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகள் அனுப்பப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் டோஸ் தடுப்பூசியாக இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களுக்கும், பூஸ்டர் டோஸாக இந்த மருந்தை போட்டுக்கொண்டவர்களும் தடுப்பூசி தரும் அதே அளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு உடலில் உண்டாகிறது. இது செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பயனுள்ளதாக இருக்கும் என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools