நாசா அதிகாரியாக பணியாற்றி வந்த நீலா ராஜேந்திரா பணி நீக்கம்!

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20-ந்தேதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நடவடிக்கையும் அடங்கும். அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு அமைச்சகங்களில் சில துறைகளின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டார்.

நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துறையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்து கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது. அதன்படி அவரது பதவியை ‘குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்’ என்று மாற்றியது. ஆனால் இதை டிரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறத

இந்த நிலையில் நீலா ராஜேந்திராவை பணிநீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா தனது உயர்மட்ட விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீலா ராஜேந்திராவின் வெளியேற்றம் குறித்து மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தது.

அதில், நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தில் பணிபுரியவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஏற்படுத்திய நீடித்த பயன்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

நீலா ராஜேந்திரா பல ஆண்டுகளாக நாசாவில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார். இதன் முதன்மை நோக்கம் பெண்களையும் சிறுபான்மையினரையும் அமைப்பில் பணியமர்த்துவதாகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools