நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடங்கியது

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் காலையிலேயே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. அதனை அதிகாரிகள் சரிசெய்து பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயந்திரம் ஒன்று பழுது ஆனதால், 235-வது எண் கொண்ட வாக்குச்சாவடியில் சுமார் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில்12.84% வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. நாங்குநேரி தொகுதியில் 18.41% வாக்குகளும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 9.66% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news