Tamilசினிமா

நாக சைதன்யா படத்தின் டிரைலர் வெளியானது

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் என்சி22 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்.

தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. படக்குழு முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.

இதையடுத்து, இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள படம் ‘தேங்க் யூ’ . இந்த படத்தில் கதாநாயகியாக ராசி கண்ணா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தேங்க் யூ’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.