நாக்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சோனாகாவ் நிபானி எம்ஐடிசி என்கிற பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீ மளமளவென பரவியதில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் தொழிற்சாலைக்குள் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.