Tamilசெய்திகள்

நயினார் நாகேந்திரனை வருங்கால முதல்வர் என்று குற்ப்பிட்டு ஒட்டிய போஸ்டாரால் பரபரப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனை கடந்த வாரம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

இதையடுத்து கூட்டணி ஆட்சி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க.வை வீழ்த்தவே பா.ஜ.க.வுடன் கைகோர்த்தோம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுதற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, நெல்லையில் ‘வருங்கால முதல்வரே’ என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா S. செல்வகுமார் பெயரில் நெல்லையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் நெல்லை பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.