நயன்தாரா விவகாரம் – வருத்தம் தெரிவித்த ராதாரவி
கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
ராதாரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை நயன்தாரா நேற்று அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“நான் நயன்தாராவை இழிவாக பேசவில்லை. அவரை பாராட்டித்தான் பேசினேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. இதற்காக நயன்தாரா வருத்தப்பட்டார் என்று சொன்னார்கள். நானும் வருந்துகிறேன். அப்படி பேசியதற்காக நயன்தாராவிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் யாரையும் புண்படுத்தி பேசியது இல்லை. நயன்தாரா குறித்த எனது பேச்சு தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற காரணத்தினால் நானே தி.மு.க வில் இருந்து விலகிக்கொள்கிறேன்.”
இவ்வாறு ராதாரவி கூறியுள்ளார்.