நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்கும் விஜய், அஜித்

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், அதிக விருந்தினர்கள் அனுமதியில்லை என்பதால் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்டில் மாற்றி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மகாபலிபுரத்தில் வைத்து நடைபெறும் திருமணத்தில் பிரபலங்கள் இருபது பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இருபது பேரில் ரஜினி , கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில்,  நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித், விஜய் இருவரும் நயன்தாரா திருமணத்தின் மூலம்  சந்திக்க இருப்பதால் தல – தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools