Tamilசினிமா

நயன்தாரா படத்தின் மீதான தடை நீங்கியது

நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படம் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியாக இருந்தது.

இதனிடையே, கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் கொலையுதிர்காலம் என்ற தலைப்பிற்கு எந்த காப்புரிமையும், யாரிடமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் எடுத்து வைத்து வாதாடினார். இதையடுத்து காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *