X

நயன்தாரா கையில் குழந்தை! – காதலர் வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் நேற்று அன்னையர் தினத்தை ஒட்டி, நடிகை நயன்தாரா ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், கையில் இருக்கும் குழந்தையின் தாய்க்கும், எனது வருங்கால குழந்தையின் தாய்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

விக்னேஷ் சிவனின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவித்தாலும், கமெண்ட்டுகளுக்கும் பஞ்சமில்லை.