முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு இயக்கியிருக்கும் படம் காதம்பரி. இதைப் பற்றி இயக்குனரிடம் பேசிய பொழுது, தான் இந்த கதையின் தலைப்பை நயன்தாரா நடித்த விக்னேஷ் சிவன் இயக்கிய சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயர் காதம்பரி யை படத்தின் தலைப்பாக வைத்துள்ளதாக கூறினார். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருப்பதாகவும் கதை ஆந்திரா அருகிலுள்ள ஒரு அடர்ந்த காட்டில் நடப்பதாகவும் ஒரே ஒரு வீட்டிற்குள் நடக்கும் கதையாகவும் அமைத்துள்ளதாக கூறினார். குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் இயக்குனர் அருள் படத்தை முடித்து இருப்பதாக கூறினார்.
இப்படி ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுத்து ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரை புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வெளியிட முன்வந்துள்ளனர்.
நடிகைகள் பார்வதி நாயர் ,நீலிமா இசை மற்றும் கிரிசா குரூப் ஆகியோர்களும் நடிகர்கள் டேனியல் பாலாஜி, டேனியல் அண்ணி போப் ஆகியோர்களும் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் தயாநிதி, கணேஷ் சந்திரசேகரன் ஆகியோர்களும் மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோர்களும் காதம்பரி டிரைலரை வெளியிட்டு உள்ளனர்.
முதலில் இதை இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் ட்ரெய்லர் வெளியிட உதவி இயக்குனர் அணுகியதாகவும் ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதைப்பற்றி விக்னேஷ் இடம் பேசிய பொழுது காதம்பரி என்ற தலைப்பில் நானும் ரவுடிதான் படத்தில் இருந்த கதாபாத்திரத்தை மறு உருவம் ஆகி நயன்தாரா அவர்களை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாகவும் ஆனால் தான் நினைத்த தலைப்பை வேற ஒரு படத்திற்கு வைக்கப்பட்டதால் தலைப்பு இல்லை என்று வருத்த பட்டதாகவும் கூறப்படுகிறது