நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணையில் இருவரும் விதிகளை மீறவில்லை என அரசு அறிவித்தது. தற்போது நயன்தாரா குழுந்தைகளை பார்ப்பதை முழுநேர வேலையாக செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார், நயன்தாரா-விக்னேஷ் தம்பதியினரை சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராதிகா சரத்குமார், அழகான பெண் நயன்தாரா மற்றும் ஜாலியான விக்னேஷ் சிவனை சந்தித்து தேநீர் அருந்தியதாகவும் அவர்களது குழந்தைகளை பார்த்ததாகவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.