X

நண்பர்கள் தினத்தன்று வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ நட்பு பாடலுக்கு அமோக வரவேற்பு

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படத்திற்கு கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘நட்பு’ பாடல் நண்பர்கள் தினமான இன்று வெளியிடப்பட்டது. நட்பை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை தமிழில் அனிருத்தும், தெலுங்கில் ஹேமசந்திராவும், மலையாளத்தில் விஜய் ஏசுதாஸும், கன்னடத்தில் யசின் நசிரும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடி உள்ளனர்.

‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு வெளியிட்ட ‘நட்பு’ பாடல் வீடியோவில், பிரம்மாண்ட அரங்கில் அனிருத் பாடுவது போன்றும், பின்னணியில் நடனக் கலைஞர்கள் ஆடுவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வீடியோவின் இறுதியில், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாயகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ‘நட்பு’ பாடலை மேலும் சிறப்பித்துள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.