தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை பற்றி எந்த செய்தி வந்தாலும் உடனே அவரது ரசிகர்கள் அதை வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோ மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய், தான் இளவயது நண்பர்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி கடந்த 2014-ம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டு டூர் சென்றபோது எடுத்த போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “2014 நண்பர்களுடன் வெளிநாட்டு டிரிப்” என்று தலைப்பிட்டு இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.