Tamilசெய்திகள்

நடுவானில் ஏர் இந்தியா விமானம் என்ஜின் பழுதானது – விமான பத்திரமாக தறையிறக்கப்பட்டது

ஏர்பஸ் ஏ320நியோ என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று பெங்களூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.

பறக்கத்தொடங்கிய 27 நிமிடங்களில் அந்த விமானத்தின் இன்ஜின் திடீரென்று பழுதடைந்து நின்றுவிட்டது. நிலைமையை சுதாரித்த விமானி, விமானத்தை பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கினார்.

இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வேறு ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விமானப் சிவில் விமானப் போக்குவரத்தின் ஒழுங்குமுறை இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

அதிக  வெளியேற்ற வாயு வெப்பநிலை காரணமாக இன்ஜின் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏர் இந்தியா கூறுகையில், நாங்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குகிறோம்.

எங்கள் பணியாளர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சிறப்பாக கையாள நன்கு பயின்றவர்கள். எங்கள் பணியளர்கள் இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.