X

நடுவரிடம் வாக்கு வாதம் செய்த முரளி விஜய்க்கு அபராதம்!

ரஞ்சி டிராபி தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.

நேற்று முன் தினம் முதல்நாள் ஆட்டத்தில் கர்நாடகா அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அந்த அணியின் பவண் தேஷ்பாண்டே அடித்த பந்து விக்கெட் கீப்பரான என் ஜெகதீசன் கையில் தஞ்சம் அடைந்தது.

பந்து வீச்சாளர் அஸ்வின் உள்பட தமிழக வீரர்கள் அனைவரும் அப்பீல் கேட்டனர். ஆனால், நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த தமிழ்நாடு வீரர்கள் ஆடுகளத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முரளி விஜய்-ஐ லெக்-அம்பயர் சமாதானம் செய்தார்.

இந்நிலையில் வீரர்களின் நன்னடத்தையை மீறும் வகையில் செயல்பட்ட முரளி விஜய்க்கு 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags: sports news