காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் நடுக்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது பைபர் படகு ஒன்று அவர்களது விசைப்படகை நோக்கி வந்தது.
அந்தப் படகில் இருந்தவர்கள் விசைப்படகின் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், படகின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள், மீனவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்த ஜி.பி.எஸ். கருவி மற்றும் வயர்லெஸ் கருவியை எடுத்துச் சென்றனர்.
அந்தக் கருவிகளின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒருவருக்கு தலையில் காயமும், மற்றொரு மீனவருக்கு காலில் காயமும் ஏற்பட்டுள்ளது.