நடிகை ஹேமாமாலினிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டும் தர்மேந்திரா

பாலிவுட் சினிமாக்களில் 1970 மற்றும் 1980-களில் பிரபல முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ஹேமாமாலினி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ளார்.

முன்னர் இந்திப்பட ரசிகர்களால் ‘கனவுக் கன்னி’ (டிரீம் கேர்ள்) என்றழைக்கப்பட்ட ஹேமாமாலினி(70) இந்த தேர்தலிலும் மதுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியுள்ள பணிகள் மற்றும் பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்து வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஹேமாமாலினியின் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்களில் அதிகம் பங்கேற்பதை தவிர்த்துவந்த பிரபல முன்னாள் அதிரடி பாலிவுட் கதாநாயகனும் ஹேமாமாலினியின் கணவருமான தர்மேந்திரா(83) இன்று அவரை ஆதரித்து மதுரா தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools