ஹன்சிகா முன்னணி நடிகையாக விளங்குவது மட்டும் அல்லாமல் நல்ல மனதுக்கும் சொந்தக்காரர். இதுவரை 34 குழந்தைகளுக்கு மேல் தத்தெடுத்து தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறார்.
அவர்களை என் குழந்தைகள் என்று தான் கூறுவார். அடுத்து மும்பையில் பெரிய முதியோர் இல்லம் ஒன்றை கட்டும் முயற்சியில் இருக்கிறார். அவர் புத்தாண்டு பற்றி கேட்டபோது ‘என் குழந்தைகளில் ஒருவர் இந்த ஆண்டு 10 -ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறார். அவரை நல்ல மதிப்பெண் எடுக்க வைத்து மாநிலத்திலேயே முதல் மாணவனாக கொண்டு வருவதையே என் புத்தாண்டு சபதமாக எடுத்துள்ளேன். மஹா படம் ஒரு திரில்லர் படம். அந்த படத்தை பற்றி ஏன் தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.
இன்னும் 3 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக வருகின்றன. அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறினார்.